/
கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு செல்லியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா
சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு செல்லியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா
ADDED :2569 days ago
காடுபட்டி:சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு வடக்குவாச்சி செல்லியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் உற்ஸவ விழா 2 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் (செப்., 25ல்) பால்குடம் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று (செப்., 26ல்) காலை பொங்கல் வைத்து சக்தி கிடா வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முளைப்பாரி ஊர்வலம் வைகை ஆற்றில் முடிந்தது.