/
கோயில்கள் செய்திகள் / முதுகுளத்தூர் அருகே மேலப்பண்ணைக்குளத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
முதுகுளத்தூர் அருகே மேலப்பண்ணைக்குளத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
ADDED :2569 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே மேலப்பண்ணைக்குளத்தில் அய்யனார் கோவில் புரவி எடுப்பு உற்சவவிழா நடந்தது. விழாவில் ஒயிலாட்டம், கும்மியாட்டம் நடந்தது. கிராமத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மண்குதிரை செய்ய கடந்த மாதம் பிடிமண் வழங்கப்பட்டது.
பின்னர் குதிரை,தவளும் பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்து வழிப் பட்டனர். கிராம மக்கள் கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்பு குதிரை,தவளும் பிள்ளையை கிராமத்தில் இருந்து அய்யனார் கோவிலுக்கு கிராமமக்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.