திருப்புவனம் பழையனூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ADDED :2569 days ago
திருப்புவனம்: பழையனூர் அழகுநாச்சியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
செப்.18 காப்புக் கட்டுதலுடன் தொடங்கி, தினசரி அம்மனுக்கும், கிராம பரிவார தேவதைகளுக் கும் சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெற்றன.
முளைப்பாரி ஊர்வலத் திருவிழா நேற்று (செப்., 26ல்) மாலை நடைபெற்றது. மந்தையம்மன் கோயிலிலிருந்து முளைப்பாரியை பக்தர்கள் சுமந்து வந்து அய்யா ஊரணியில் கரைத்தனர்.