உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதூரில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார்

ஸ்ரீபெரும்புதூரில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் எழுந்தருளினார்

ஸ்ரீபெரும்புதூரில்: வேதாந்த தேசிகனின் சாற்றுமறைக்கு பங்கேற்க, திருவள்ளூரில் இருந்து கிளம்பிய வீரராகவப் பெருமாள், நேற்று (செப். 27ல்)ஸ்ரீபெரும்புதூரி எழுந்தருளினார்.

புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகனின் அவதார தினம். இவரின், 750ம் ஆண்டு, திருஅவதார மஹோத்சவ விழா, 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூர் வேதாந்த தேசிகன் கோவிலில் துவங்கியது.

கடைசி நிகழ்வான சாற்றுமறை, நேற்று (செப்., 27ல்) நடந்தது.இந்நிகழ்வில் பங்கேற்க, திருவள்ளூரில் இருந்து கிளம்பிய வீரராகவ பெருமாளை, ஸ்ரீபெரும்புதூர் ஊர் எல்லையில், வேதாந்த தேசிகன் எதிர்கொண்டு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

பின், ஸ்ரீபெரும்புதூர் வீதிகளில், இருவரின் புறப்பாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு, இருவருக் கும் விசேஷ திருமஞ்சனம் நடந்தது.

இரவு, வேதாந்த தேசிகனுக்கு திருப்பாவை சாற்றுமறை, திருவாய்மொழி சாற்றுமறை நடந்தது. 750 பழங்கள் வைத்து, சிறப்பு வழிபாடும் நடந்தது.

ராமானுஜ நூற்றந்தாதி மற்றும் யஜீர், சாம வேத பாராயணங்களும், நாதஸ்வர, வாண வேடிக்கையுடன், ஸ்ரீபெரும்புதூர் மாட வீதிகளில் நள்ளிரவு புறப்பாடு நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !