திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார் பூஜை
ADDED :2631 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா, நவ., 14ல், கொடியேற்றத்துடன் துவங்கி, நவ., 23ல், 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 10 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல், விழா சிறப்பாக நடக்க வேண்டி, டி.எஸ்.பி., அண்ணாதுரை தலைமையில், மலை உச்சியில், அருணாசலேஸ்வரர் பாதத்துக்கு, போலீசார் சிறப்பு பூஜை செய்தனர்.