அழகற்றவர்களை பழிக்காதீர்கள்
அழகாயிருந்தால் ரசிப்பார்கள் என்பதில்லை. அழகற்ற முகங்களையே உலகம் அதிகம் ரசிக்கிறது என்பது நடைமுறை.அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான்சனின் உருவத்தை ஒரு ஓவியர் வரைந்தார். ஜனாதிபதி அதைப் பார்த்து விட்டு, “இது அழகாக இல்லையே, இதை என் அறையில் எப்படி மாட்டுவேன்,” என சொல்லி விட்டாராம். ஓவியர் வருத்தத்துடன் சென்றார். ஆனால் அந்த ஓவியத்தைப் பார்த்த அமெரிக்க மியூசிய நிர்வாகிகள் அதன் அழகில் லயித்து, பல லட்சங்களுக்கு வாங்க போட்டியிட்டனர். இயேசு கிறிஸ்துவும் அழகாகவே இருந்தார். ஆனால், அவர்சிலுவையில் அறையப்பட்ட பிறகு, ‘அவருக்கு அழகுமில்லை, சவுந்தர்யமும் இல்லை, அவரைப் பார்க்கும் போது நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது,” என்று பைபிளில் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை நிலை என்ன? சிலுவையில் அறையப்பட்ட அழகற்ற அந்த முகம் தான் இந்த உலகில் உள்ள ஜீவன்களின் மனதில் இருந்து அழியாமல் இருக்கிறது. இனியாவது அழகைத் தேடி அலையாதீர்கள். அழகற்றவர்களை பழிக்காதீர்கள்.