ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் மகா குரு பெயர்ச்சி ஹோமம்
ADDED :2663 days ago
ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் மகா குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.அதனையொட்டி, நேற்று (அக்., 4ல்) மதியம் பரிகார ஹோமம் பரிகார அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்து தொடர்ந்து குருபகவான் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் மதனா, சிவாச்சாரியார் ரவிசுந்தர், ஜெய்சங்கர் குருக்கள் செய்திருந்தனர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.