விழுப்புரம் தங்க கவசத்தில் குரு அருள்பாலிப்பு
ADDED :2558 days ago
விழுப்புரம்:குருபெயர்ச்சியை முன்னிட்டு, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில், குரு தட்சணா மூர்த்தி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.குரு பகவான் நேற்றிரவு (அக்., 4ல்) துலாம் ராசியில் இருந்து விருட்சிகம் ராசிக்கு பெயர்ச்சியானார்.
இதை முன்னிட்டு, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நேற்று (அக்., 4ல்) காலை 9:00 மணிக்கு குரு தட்சணாமூர்த்தி மற்றும் நவகிரகத்தில் உள்ள குரு சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம் போன்றவைகளால் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.குரு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மலர் அலரங்கரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.