பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி கோலாகலம்
ADDED :2562 days ago
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா, கோலாகலமாக நடந்தது. குரு பெயர்ச்சியை ஒட்டி, பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தி பகவானுக்கு, நேற்று (அக்., 5ல்)அதிகாலை கணபதி பூஜை, நவக்கிர ஹோமம், மூல மந்திர ஹோமம், மங்கள திரவிய ஹோமம் செய்து, மஹா பூர்ணாஹுதி நடந்தது. இதையடுத்து பல்வேறு திரவியங்களை கொண்டு, சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. வெள்ளி கவசத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பவானி, காளிங்கராயன் பாளையம், குமாரபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கலந்து கொண்டனர்.