ஈரோடு ஈஸ்வரன் கோவில் தெப்பக்குளம் அமைக்க நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு
ADDED :2562 days ago
ஈரோடு: ஒளிரும் ஈரோடு அமைப்பு, ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் சார்பில், ஈரோடு கோட்டை ஈஸ் வரன் கோவில் தெப்பக்குளம், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு நிதி வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தென்னிந்திய நூற்பாலைகள் சங்க தலைவர் விநாயகம் தலைமை வகித்தார். ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன், நிதி கொடுத்தவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். விழாவில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி வரவேற்றார். ஆர்.ஆர்.துளசி பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி, ஒளிரும் ஈரோடு அமைப்பின் துணைத்தலைவர் தேவராஜன், அறங்காவலர்கள், வி.வி.நேஷனல் நிறுவனத் தலைவர் செந்தில்முருகன், செந்தில் மருத்துவமனை டாக்டர்கள் செந்தில்வேல், கவுரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.