ஷீரடி சாய்பாபா கோவிலில் 100ம் ஆண்டு மகா சமாதி தினம்
ADDED :2554 days ago
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி கமல சாய்பாபா கோவிலில், வரும் 19ம் தேதி ஷீரடி சாய்பாபாவின் 100ம் ஆண்டு மகா சமாதி நிறைவு தின விழா நடக்கிறது.வரும் 19ம் தேதி காலை 5.00 மணிக்கு ஆரத்தி, 6.00 மணிக்கு புதுச்சேரி பல்கலைகழக நுழைவு அருகில் உள்ள நாகவள்ளியம்மன் கோவிலில் இருந்து 108 பன்னீர் குடம் புறப்பட்டு, கமல சாய்பாபா மூலவருக்கு அபிேஷகம் நடத்தப்படுகிறது. காலை 9.00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், சாய் பஜன் நடக்கிறது. சாய்பாபா பல்லக்கு உற்சவம், ஆரத்தி நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.