குலசை தசரா விழா கோலாகல துவக்கம்
ADDED :2553 days ago
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசராவிழா நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.அதிகாலை, 5:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதியுலா வந்தது. காலை, 6:00 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் காப்பு கட்டினர். தசராவிழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள் காளி, அம்மன், முருகன், கரடி, குரங்கு, சிங்கம், அரக்கன், குறவன், குறத்தி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்தனர்.தொடர்ந்து, 11 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை சிறப்பு பூஜைகள், இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது.