உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை

சவுடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜை

போடி: போடி தாய்ஸ்தலம் சவுடாம்பிகை அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மகேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஜாதி பொதுமை தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் கொலு  வைக்கப்பட்டு பெண்கள் மூலம் பஜனை  நடத்தப்பட்டன.

* குலாலர் பாளையம் காளியம்மன் கோயில்,  மேலத்தெரு சவுடம்மன் கோயில், திருமலாபுரம் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை  நடந்தது.  

*கூடலுார் மழலையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் சகிலா சுலைமான், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாணவர்கள் , ஆசிரியர்கள் சேகரித்த  கொலு பொம்மைகள் , பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் பங்கேற்றனர். *சுந்தரவேலவர் கோயிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் இக்கண்காட்சிக்கு முன் சிறப்பு பூஜை நடக்கிறது. பெண்கள் பக்தி பாடல்களை பாடினர். பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !