உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் கோவில்களில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்

திருவள்ளூர் கோவில்களில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கோவில்களில் நவராத்தரி விழா கோலாகலமாக துவங்கியது.திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஒன்பது நாள் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக துவங்கியது. முதல் நாளன்று, காலை, தேசிகன், 750வது நாள் முன்னிட்டு, மாணவ - மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. பின், மாலையில் கல் இழைத்த கொண்டை அலங்காரத்தில் பெருமாள் நவராத்திரி மணடபத்திற்கு எழுந்தருளினார்.

முன்னதாக பெருமாள், தாயார், ஆதிவண் சடகோப சுவாமி உள் புறப்பாடு, பத்தி உலாத்தல் நடைபெற்றது.வீரராகவர் கோவில் தேவஸ்தானத்தை சேர்ந்த, ராஜா தோட்டத்தில் உடையவர் யாத்ரி நிவாசில் சுவாமி தேசிகனின், 750 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நவராத்திரி விழாவுடன் துவங்கியது.தாமல் ராமகிருஷ்ணன் உபன்யாசம், வர்ஷா புவனேஸ்வரியின் ஆண்டாள் கல்யாணம், ஹரிகதா நிகழ்ச்சி நடைபெற்றது.சுவாமி தேசிகன் பற்றி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாலையில் நடந்த துவக்க விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. சிவ - விஷ்ணு கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, பூங்குழலி அம்மன், பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.  இரவு, 7:00 மணிக்கு திருத்தேர் ஆலய உலா நடைபெற்றது.கன்யகா பரமேஸ்வரி கோவிலில், ஸ்தாபனம் செய்யப்பட்டு, இரவு துர்கா அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.பஜார் தெருவில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில், திரிபுரசுந்தரி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !