உடுமலையில் நவராத்திரி விழாவுக்கு ஏற்பாடு
ADDED :2611 days ago
உடுமலை: உடுமலையில் நவராத்திரி விழாவையொட்டி, கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனநவராத்திரி இரண்டாம் நாள் விழாவையொட்டி, கோவில் மற்றும் வீடுகளில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மனை வடிவமைத்து வழிபாடு நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நாள்தோறும், ஆன்மிக நிகழ்ச்சிகள் மாலையில் நடக்கிறது. கோவில் கோபுரங்களில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 18ம் தேதி வரை, சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.