உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

கோவை கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

கோவை: நவராத்திரி விழாவையொட்டி, அம்மன் கோவில்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கணபதி பிளேக் மாரியம்மன், சின்னவேடம்பட்டி கண் மாரியம்மன், கோவைப்புதுார் பத்ரகாளியம்மன் கோவில்களில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். சின்னவேடம்பட்டி மகாலட்சுமி கோவிலில், பாரதப்போரில் இடம் பெற்றிருந்த காட்சிகள், கொலுவில் அரங்கேற்றப்பட்டிருந்தன.பொன்னையராஜபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குளத்துப்பாளையம் கன்னித்தாய் கோவில்களில், கொலு வைக்கப்பட்டிருந்தது. பெரியகடைவீதி கோனியம்மன் கோவிலில், அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மங்கலநான், மஞ்சள், குங்குமம், வளையல், பூக்கள் ஆகிய மங்கலப்பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !