திண்டிவனம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவ விழா
ADDED :2610 days ago
திண்டிவனம்:நவராத்திரியை முன்னிட்டு திண்டிவனம், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
திண்டிவனம் இலுப்பை தோப்பில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10ம் தேதி மாலை துவங்கியது. இதையொட்டி நடந்த ஊஞ்சல் உற்சவத்தில், அம்மன் பிரம்மணி அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திண்டிவனம் சாணக்கியா பள்ளியின் துணைத்தலைவர் வேல்முருகன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், சந்தானம், சஞ்சீவிமுருகன், மணிகண்டன்,
கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.