உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாணம்

செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் திருக்கல்யாணம்

செஞ்சி:செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாத உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் புரட்டாசி மாத
சனிக்கிழமையை முன்னிட்டு கடந்த நான்கு வாரங்களாக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. இதன் நிறைவாக நேற்று (அக்., 14ல்) திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று (அக்., 14ல்) காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர்.காலை 11:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து
திருக்கல்யாணமும், சாமி கோவில் உலாவும், திருத்தாலாட்டும் நடந்தது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், பாகவதர்களின் கச்சேரியும், கோலாட்டம்,
கும்மியாட்டம் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !