உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருக்கோவிலூர் கீழையூர்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 9ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் (நேற்று 13ல்) காலை 8:00 மணிக்கு மூலவர் அம்பாள் பிரகன்நாயகிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை 6:00 மணிக்கு‚ பஞ்சமூர்த்திகள் அர்ச்சனை மூலவர் வீரட்டானேஸ்வரர் அம்பாள் பிரகன்நாயகி சந்தனகாப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் உற்சவர் சிவானந்தவள்ளி அம்பிகை மாவடி சேவையில் சிவபெருமானை பூஜிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !