திருப்புத்தூர் ஆதித் திருத்தளிநாதர் கோயில் வளாகத்தில் துப்புரவு பணி
ADDED :2568 days ago
திருப்புத்தூர்:திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லூரி வணிகவியல்துறை இரண்டாமாண்டு மாணவர்கள் ஆதித் திருத்தளிநாதர் கோயில் வளாகத்தில் துப்புரவு பணி
மேற்கொண்டனர்.அழகப்பா பல்கலை புற விரிவாக்கத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த உழவாரப் பணியை செயலர் ராமேஸ்வரன் அறிவித்தார். துறைத் தலைவர் மாரியப்பன் துவக்கினார்.
கோயில் வளாகத்தில் தேவையற்ற செடிகளையும், கட்டுமானங்களில் படிந்துள்ள தூசியையும் மாணவர்கள் அகற்றினர்.பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.