வாடிப்பட்டியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் விஜயதசமி விழா
ADDED :2591 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் விஜயதசமி விழா பொதுக்கூட்டம் மற்றும் அணிவகுப்பு நடந்தது.நிர்வாகி கமலக்கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகி சின்னபாலன் முன்னிலை வகித்தார். திருவேடகம் விவேகானந்தா கல்லூரி நிர்வாகி சுவாமி பரமானந்தா ஆசி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் முத்துராம், சசிக்குமார், விஜயகுமார் ஆகியோர் செய்தனர்.