காரைக்குடி கோவிலூர் நாச்சியப்ப சுவாமி குருபூஜை விழா
ADDED :2648 days ago
காரைக்குடி: கோவிலூர் மடத்தின் 12-வது குரு மகா சன்னிதானமாக இருந்து கல்வி நிறுவனங் களை நிறுவி சமுதாய சேவையில் ஈடுபட்ட நாச்சியப்ப சுவாமிகள் 7-வது குருபூஜை விழா கோவிலூர் ஆண்டவர் கலையரங்கில் தொடங்கியது.
முதல் நாள் நடந்த கருத்தரங்கு விழாவிற்கு கோவிலூர் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி தலைமை வகித்தார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமிகள் மற்றும் சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதாளர் குழந்தை கவிஞர் செல்ல கணபதி பரிசு வழங்கினர். திருக்குறள் பேரவை தலைவர் மேலை.பழனியப்பன் பேசினார். இரண்டாம் நாள் விழாவில் மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம், மேலாளர் ராம. குரு மூர்த்தி பேசினர். நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.