ஸ்ரீவி., ஆலயத்தில் ஸ்தோத்திர பண்டிகை
ADDED :2590 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை மற்றும் விற்பனைவிழா நடந்தது. இதை முன்னிட்டு நடந்த இரவு சிறப்பு ஆராதனையில் செல்வின்சாமுவேல், ஜாய்சாமுவேல், ஹேன்னா டேவிட் செய்தியளித்தனர். நேற்று முன்தினம் (அக்., 14ல்) சிலுவை கொடியேற்றப்பட்டு ஸ்தோத்திர ஆராதனையை சபைகுரு சாம்பிரபு நடத்தினார்.பின்னர் நடந்த விற்பனை விழாவில் ஸ்டால்கள் அமைக்கபட்டு பொருட்கள் விற்பனைக்கு வைத்து ஏலம் விடப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கபட்டது.