சரஸ்வதி பூஜை: துணுக்குகள்
* வீணையோடு காட்சி தருபவள் சரஸ்வதி. ஆனால் வேதாரண்யம் சிவன் கோயிலில் இருக்கும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதே போல ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத சரஸ்வதியை காணலாம்.
* சரஸ்வதியின் நட்சத்திரம் மூலம். சொல்லின் செல்வரான அனுமனுக்கும் இதே நட்சத்திரம்தான்.
* அன்ன வாகனத்தில் இருக்கும் சரஸ்வதியை ’அம்சவல்லி’ எனவும் குறிப்பிடுவர். மயிலில் இருக்கும் சரஸ்வதியை ’மயூர வாகினி’ எனவும் அழைப்பர்.
* பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள். இதனால் சரஸ்வதியை ’நாமகள், வாக்தேவி’ எனவும் குறிப்பிடுவர்.
* தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி இருவரும் ஞானம் அருள்பவர்கள். இருவரின் கையிலும் அறிவின் அடையாளமாக ஸ்படிக மாலை உள்ளது.
* சப்தமாதர் என்னும் ஏழு தெய்வங்களில் சரஸ்வதிக்கு ’பிராம்மி’ என்பது பெயர்.
*சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இவருக்காக கிழங்கு விற்கும் பெண்ணாக வந்தாள்.
* பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி சத்திய லோகத்தில் வாசம் செய்கிறாள்.
* ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி நூலில் சரஸ்வதி வாழ்த்து (வழக்கமாக விநாயகர் வாழ்த்து இருக்கும்) இடம்பெற்றுள்ளது.
* கர்நாடகாவிலுள்ள பஸ்ராலு மல்லிகார்ஜுனர் கோயிலில்
ஞான சரஸ்வதி அருள்புரிகிறாள்.
* பாலித்தீவிலுள்ள தம்பாக் ஸைரிங் குளத்தில், விஜயதசமியன்று பக்தர்கள் புனிதநீராடுவர். இங்கு சரஸ்வதியின் வாகனமான அன்னத்தை மஞ்சள் நிறத்தில் வடிக்கின்றனர்.
* ஜப்பானியர்கள் சரஸ்வதியை ’பென்டென்’ என அழைக்கின்றனர். மார்ச் 3 அன்று கொலு கண்காட்சி வைப்பர்.
* சரஸ் என்பதற்கு நீர், ஒளி என்பது பொருள். சரஸ்வதிக்குரிய திதி வளர்பிறை நவமி. புரட்டாசியில் வரும் நவமியை மகாநவமி என அழைப்பர்.
* வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசி ௧ல் (அக்.௧௮) வருகிறது.