உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

* அக்.13 புரட்டாசி 27: குற்றாலம் குற்றாலநாதர் பவனி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் கருடவாகனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை.

* அக்.14 புரட்டாசி 28: சஷ்டி விரதம், உபாங்க லலிதா கவுரி விரதம், பாபநாசம் சிவன் பவனி, அகோபில மடம் முதல்பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை.

* அக்.15 புரட்டாசி 29: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம் ஆரம்பம், அகோபிலமடம் 20வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம், கரிநாள்.

* அக்.16 புரட்டாசி 30: குற்றாலம் குற்றாலநாதர் புறப்பாடு, தேனி மாவட்டம் குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக்காட்சி, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல்.

* அக்.17 புரட்டாசி 31: ஸ்ரீ துர்காஷ்டமி, ஏனாதி நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சியம்மன் கொலு தர்பார் காட்சி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சிவன் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிபெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

* அக்.18 ஐப்பசி 1: சரஸ்வதிபூஜை, ஆயுதபூஜை, சகல சிவாலயங்களில் ஐப்பசிவிஷு தீர்த்தம், திருவோண விரதம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விழா, திருச்செந்தூர் முருகன் தீர்த்தாபிஷேகம், திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் முத்தங்கி சேவை, திருவாரூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், வேதாரண்யம், திருக்காரைவாசல், திருக்கோகர்ணம் சிவன் கோயில்களில் நிறைபணி உற்ஸவம்.

அக்.19 ஐப்பசி 2: முகூர்த்தநாள், விஜயதசமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பரிவேட்டை, உத்தரமாயூரம் வள்ளலார் சன்னதிக்கு சந்திரசேகரர் எழுந்தருளல், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் ஊஞ்சல் காட்சி, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !