பிரசாதம் இது பிரமாதம்
ADDED :2591 days ago
தேங்காய் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
தேங்காய்த் துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 4
தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
செய்முறை: அரிசியை வேக வைத்து ஒரு தட்டில் ஆற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து தேங்காய்த் துருவலை அதில் சேர்த்து வதக்கி ஆற வைத்துள்ள சாதத்தில் போடவும். உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாகக் கிளறவும். கொத்தமல்லி தழையைப் போட்டு இறக்கி வைக்கவும்.