ஆயுத பூஜை என்பது ஏன்
ADDED :2591 days ago
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அதற்கு உதவியாக இருக்கும் ஆயுதங்களைத் கடவுளாக எண்ணி வணங்குவதே ஆயுதபூஜை. தொழில் நிறுவனங்களில் உள்ள இயந்திரம் உள்ளிட்ட கருவிகளையும், அன்றாடம் பயன்படும் அரிவாள்மனை, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்வர். விஜயதசமியன்று, அவற்றை எடுத்து பணிகள் மேற்கொண்டால் தொழில் வளம் சிறக்கும். ஜடப்பொருளிலும் கடவுளைக் காண்பதே ஆயுத பூஜையின் நோக்கம். குழந்தைகள் ’அட்சர அப்யாசம்’ எனப்படும் எழுத்துப் பயிற்சியை இந்நாளில் செய்வது சிறப்பு.