செம்மறியாடுடன் சரஸ்வதி
ADDED :2731 days ago
புதுடில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சரஸ்வதி சிற்பம் உள்ளது. மலர்ந்த தாமரையில் அமர்ந்துள்ள இவளின் கைகளில் அட்சமாலை, சுவடிகள் உள்ளன. முத்துமாலை கழுத்தை அலங்கரிக்கிறது. கிரீடம் போன்ற அமைப்பில் தலைமுடி உள்ளது. வட மாநிலங்களில் சரஸ்வதிக்கு அன்னப்பறவை வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு மட்டும் செம்மறி ஆடு அமர்ந்த நிலையில் உள்ளது. சரஸ்வதியின் திருவடியில் வணங்கியபடி பக்தர் ஒருவரும் இருக்கிறார்.