உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறுத்துறை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பு பூஜை

குறுத்துறை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பு பூஜை

திருநெல்வேலி:குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தைப்பூசத்தை முன்னிட்டு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி குகைக்கோயிலில் காலையில் கும்ப ஜெபம், சலகவிதமான திரவியங்களால் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கட்டளைதாரர் முன்னாள் எம்.எல்.ஏ., மாலைராஜா மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் அலுவலர்கள் செய்திருந்தனர்.நெல்லை ஜங்ஷன் பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோயில், பாளை., மேலவளவு சுப்பிரமணிய சுவாமி, வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோயில், தியாகராஜநகர் சின்மய மிஷன் சின்மய கார்த்திகேயன் கோயில் உட்பட பல கோயில்களில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !