உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் இயக்கம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் இயக்கம்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கவிழாவில், அரசுப் பள்ளிக்கு, 20 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் தலைவர், அன்பழகன் பிறந்த நாள், இயக்கத்தின், 16ம் ஆண்டு விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா என, முப் பெரும் விழா நேற்று (அக்., 16ல்) கொண்டாடப்பட்டது.

சோத்துப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், அந்தப் பள்ளிக்கு, ஸ்மார்ட் கலையரங்கம், மின்விசிறிகள், குழல் விளக்குகள், மின்சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.பள்ளி வளாக சுவர்களுக்கு வர்ணம் பூசுதல், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், 300 மாணவர்களுக்கு பைகள், குடை உள்ளிட்டவையும் அளிக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு, வேட்டி - சேலைகள் வழங்கப்பட்டன.பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !