விஜயதசமி விழா கோலாகலம்: குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
ADDED :2545 days ago
மதுரை: ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், இளம் தளிர்களுக்கு கல்வி புகட்டும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கான கல்வி பயிற்சி அளிப்பதற்கும் உகந்த நாள், விஜயதசமி. அந்த நன்னாளான இன்று, இளம் தளிர்களுக்கு, எழுத்தறிவை துவக்கி வைக்கும், ‘அரிச்சுவடி ஆரம்பம்’ என்ற , நிகழ்ச்சி, ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு தினமலர் சார்பில் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கான அரிச்சுவடி நிகழ்ச்சி, மதுரை இன்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடந்தது. ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்கள் குழந்தைகளை அரிசியில் அ எழுத வைத்தனர்.