உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

திருப்பதி, திருமலையில் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்ஸவம், தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவடைந்தது. ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், 10ம் தேதி, நவராத்திரி பிரம்மோற்ஸவம் துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை, மலையப்பஸ்வாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க பல்லக்கில் ஸ்ரீவாரி திருக்குளத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.அதன்பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் என அனைவரும், திருக்குளத்தில் புனித நீராடினர். பின், உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்து, அவர்கள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.நவராத்திரி பிரம்மோற்ஸவத்திற்காக, திருமலையில், 50 டன் மலர்களால், அலங்காரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !