உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி, ஐயப்பன் கோவிலில், விஜயதசமி விழா: குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

கிருஷ்ணகிரி, ஐயப்பன் கோவிலில், விஜயதசமி விழா: குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஐயப்பன் கோவிலில், நேற்று அக்., 19ல் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெற்றோர் தங்கள் குழந்தையை மடியில் அமர வைத்து, ஓம் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ என குழந்தையின் கையை பிடித்து அரிசியிலும், நெல்மணி யிலும் எழுதினர். கோவில் குருக்கள், குழந்தையின் நாக்கில் மெல்லிய தங்கத்தால், அ என்றும், ஓம் என்றும் எழுதி துவக்கி வைத்தார். இதே போல், பள்ளியில் சேர்க்க தயாராக உள்ள குழந்தைகளின் பெற்றோர், நேற்று பூஜை அறையில் அமர்ந்து அரிசியில் அ, க, என்ற எழுத்துகளை எழுத கற்றுத்தந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !