உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் கெலமங்கலத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கல்யாண உற்சவம்

ஓசூர் கெலமங்கலத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கல்யாண உற்சவம்

ஓசூர்: கெலமங்கலத்தில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று 19ல் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் சென்னகேசவ சுவாமி தெருவில் உள்ள, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் (அக்.,18ல்) துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு சாந்தி ஹோமம் நடந்தது.

நேற்று அக்., 19ல் காலை, 7:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், சங்கல்பம், 12:00 மணிக்கு ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கல்யாண உற்சவம், மதியம், 3:00 மணிக்கு ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !