ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :2549 days ago
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், தினந்தோறும் நடக்கும், நித்ய அக்னி ஹோமம் துவங்கி, 18 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதையொட்டியும், நவராத்திரி விழா முடிந்ததை முன்னிட்டும், 108 வலம்புரி சங்காபி?ஷகம் நேற்று நடந்தது.சங்கில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், வாரணாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரத்தில், அம்மன் அருள் பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறைதான், வாரணாம்பிகையம் மன் மூலவருக்கு சங்காபிஷேகம் நடக்கும். இதனால் ஏராளமான பக்தர்கள், நேற்று அக்., 19ல் தரிசனம் செய்தனர்.