ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் கோயிலில் வசதி பக்தர்கள் வலியுறுத்தல்
ADDED :2543 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் பகுதி யில் கழிப்பறை வசதி ஏற்படுத்த பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் மூலவரான விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். சதுர்த்தி விழாவின் போது விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் அருகே கழிப்பறை வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் சிரமடைந்து வருகின்றனர். கழிப்பறை வசதி ஏற்படுத்த ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.