மதுரை காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம்
ADDED :2543 days ago
மதுரை: பழங்காநத்தம், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. மதுரை மீனாட்சி கல்யாணத்தை காணவந்த பதஞ்சலி மகரிஷி தவம் செய்த தலம் இது. விக்ரம பாண்டியனால் கட்டப்பட்ட கோயில். காசிக்கு செல்ல இயலாதவர்கள், இங்குள்ள சிவனை வழிபட்டால் காசி சென்ற பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.