அவலூர்பேட்டையில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :5365 days ago
அவலூர்பேட்டை :அவலூர்பேட்டை சித்தகிரி முருகனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது.
அவலூர்பேட்டையில் தைப்பூசத்தை முன்னிட்டு அகத்தீஸ்வரர் கோவிலிலிருந்து 108 பால் குடங்களை பக்தர்கள் சித்தகிரி முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதி உலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.