உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஞ்சாலத்தில் குருபூஜை விழா

பாஞ்சாலத்தில் குருபூஜை விழா

திண்டிவனம் :திண்டிவனம் அடுத்த பாஞ்சாலத்தில் அன்னை வாராகிதாசர் பெருமாள் ராமமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது.
திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் ராமமூர்த்தி சுவாமி. இவர் அன்னை வாராகியின் தாசராக, பல்வேறு உபதேசங்கள் செய்து வந்தார். பல ஊர்களிலிருந்து இவரை தேடி சீடர்கள் வந்து, ஆசிபெற்று வாழ்க் கையில் உயர்நிலையை அடைந்துள்ளனர்.
பெருமாள் ராமமூர்த்தி சுவாமிகள் கடந்த 2011, ஜன., 19 ம் தேதி சமாதி நிலையை அடைந்தார். அவரது நினைவிடம், சென்னை தேசிய நெடுங்சாலையில், பாஞ்சாலம் ரயில்வே பாதை அருகில் அமைந்துள்ளது. கடந்த 5ம் தேதி தை திருவாதிரை நட்சத்திரத்தில், முதலாம் ஆண்டு குருபூஜை நடந்தது. சுவாமிகளின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மேல் அமைக்கப்பட்டுள்ள நந்தி பெருமானுடன் கூடிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
பூஜைக்கான ஏற்பாடுகளை நிறுவனர் சொக்கம் மாள் பழனி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !