உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆகாச துர்க்கை!

ஆகாச துர்க்கை!

கதிராமங்கலம் தலத்தில் வனதுர்க்கை கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது வித்தியாசமான காட்சி. இவள் தினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதிகம் உள்ளதால் கோபுரத்தில் துர்க்கையின் மேற்புறம் சதுரவடிவில் துவாரம் அமைத்துள்ளனர். இவளை ஆகாச துர்க்கை என்றும் அழைப்பார்கள். இந்த துர்க்கையை முன்புறம் பார்த்தால் அம்மன் உருவமாகவும், பின்புறம் சர்ப்பம் படம் எடுத்திருப்பது போன்றும் தெரிவது அதிசயமாகும். அம்பாளுக்கு  அர்ச்சனை செய்யும்போது தேவியின் வலது உள்ளங்கையில் வியர்வை முத்துக்கள் வெளிப்படுவது மற்றுமொரு அதிசயமாகும். இங்கு  ராகுகால வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் மயிலாடுதுறை அருகே உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !