உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் ஐப்பசி பெரும் பூஜை விழா

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் ஐப்பசி பெரும் பூஜை விழா

விருதுநகர்: திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயிலில் பெரிய பாளையத்து பாவனி அம்மன் பாலநாககன்னி அம்மன், பால நாகம்மாள் கோயிலில் ஐப்பசி பெரும்பூஜை திருவிழா நடந்தது. திருவிழாவானது ஐப்பசி முதல் வெள்ளியன்று நடப்பது வழக்கம்.

இதை முன்னிட்டு தேவியருக்கு பால், பச்சரிசி, பன்னீர், மஞ்சள் என 21 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. மாலையில் பக்தர்களுக்கு காசு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வெளி மாநில பக்தர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை குருநாதர் சக்தி மாரியப்பன் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !