ஊட்டியில் கோசோலைக்கு தீவனம் ஜெயின் அமைப்பு வழங்கல்
ADDED :2529 days ago
ஊட்டி: ஊட்டியில் உள்ள அரியந்த் மஞ்ச் என்ற ஜெயின் அமைப்பு, மசினகுடியில் உள்ள கோசோலைக்கு, கடந்த பல மாதங்களாக, இலவசமாக உணவு பொருட்கள்; தீவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பினர்,1,000 கிலோ மாட்டு தீவனம்; உணவு பொருட்களை கோசோலை நிர்வாகிகளிடம் வழங்கினர்.முன்னதாக, ஊட்டி ஜெயின் கோவிலில் உணவு பொருட்களை வைத்து, மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதன் நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக் கிழமையில், பசுக்களுக்கு தீவனம் வழங்க எங்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் எந்த பகுதியில் கோசோலை அமைத்தாலும், எங்கள் அமைப்பினர், உதவி செய்ய தயாராக உள்ளனர். இதனால், பசுக்களின் உணவு தட்டுப்பாடு நீங்கும் என்றனர்.