கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, பெக்கிலியில் வால்மிகி ஜெயந்தி விழா
ADDED :2577 days ago
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, பெக்கிலி பகுதியில், வால்மிகி மகிரிஷி ஜெயந்தி விழா, நேற்று (அக்., 28ல் நடந்தது. லட்சுமிபதி பாபு தலைமை வகித்தார். கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபுரம் வால்மிகி ஞான பீட பிரேமானந்த சுவாமி பங்கேற்று பேசினார்.
விழாவில், வால்மிகி மகரிஷி மண்டபங்களை பல்வேறு இடங்களில் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வால்மிகி ஜனசேனா தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சாதனகுமார், பொருளாளர் லகுமையா நாயுடு உட்பட பலர் பங்கேற்றனர்.