செஞ்சி மேல்களவாய் கிராமத்தில் விநாயகர் கோவில் கட்ட பூமி பூஜை
ADDED :2531 days ago
செஞ்சி: மேல்களவாய் கிராமத்தில் புதிதாக விநாயகர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடந்தது.செஞ்சி அருகே உள்ள மேல்களவாய் கிராத்தில் உள்ள விநாயகர் கோவில் சிதில மடைந்து போனது. எனவே புதியதாக 15 லட்சம் ரூபாய் மதிப்பில் விநாயகர் கோவில் கட்ட கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான திருப்பணிகள் துவங்க பூமிபூஜை நேற்று (அக்., 28ல்) நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.