சித்தாமூர் பெருங்கருணை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் யாத்திரை
ADDED :2532 days ago
சித்தாமூர் : பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு, வேல் பாத யாத்திரையாக பக்தர்கள் சென்றனர். சித்தாமூர் அடுத்த பெருங்கருணையில், மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் திருத்தலமான இது, நடுப் பழனி என, அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு, மறைமலை நகர் நமசிவாய சபா மற்றும் பக்தர்கள் இணைந்து, வேல் பாத யாத்திரை நடத்தினர்.
மறைமலை நகர் தனியார் திருமண மண்டபத்தில் இருந்து, வேல் காவடி பூஜையோடு இந்த யாத்திரை புறப்பட்டது.பெருங்கருணை, கனக மலை அடிவாரத்தில், படி பூஜை செய்து, ஏக தச ருத்ர பாராயணத்துடன் வேல், காவடி, பால்குடம் ஆகியவை எடுத்து வரப்பட்டது. பாதயாத்திரை குழுவினருடன், ஏராளமான பக்தர்களும் பங்கேற்றனர்.