நன்றி சொல்ல தாளமிட்ட யானை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகிலுள்ள பூசமலைக்குப்பத்தில் காஞ்சி மகாசுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். அதற்கு சற்று தூரத்தில் மடத்திற்கு சொந்தமான யானை, குதிரை, ஒட்டகம், பசுமாடுகள் தனித்தனி கொட்டகைகளில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒருநாள் இரவு யானையின் கூடாரத்தில் தீப்பற்றியது. தென்னங்கீற்றில் எப்படியோ தீப்பற்றியிருக்கும் போலிருக்கிறது. தூங்கியதால் யாருக்கும் தெரியவில்லை. காலை எழுந்த பின்னரே விஷயம் தெரிந்தது. ஆனால் அங்கு யானையைக் காணவில்லை. அவ்வளவு பெரிய உருவம் எங்கே ஒளிந்து கொள்ளும்? என சிப்பந்திகள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். வழிப்போக்கர் ஒருவர், காட்டுப்பகுதியில் உள்ள குளத்தில் யானை ஒன்றை பார்த்ததாகத் தெரிவித்தார். அங்கு சென்ற சிப்பந்திகள் ’மடத்து யானை’ என்பதை உறுதிப்படுத்தினர். எவ்வளவோ முயற்சித்தும் யானை அங்கிருந்து வர மறுத்தது. மகாசுவாமிகளிடம் விபரம் தெரிவிக்க, அவரும் புறப்பட்டார். யானையை நோக்கி ’அருகில் வா’ என கையசைத்தார். மெல்ல எழுந்த யானை சுவாமிகளின் ன் வந்து மண்டியிட்டு காலைக்
காண்பித்தது.
தீக்காயம் இருப்பதைக் கண்ட சுவாமிகள் வருந்தினார். பூசமலைக்குப்பத்திற்கு அழைத்து வந்து கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தார். சிலநாள் சென்ற பின் யானை முற்றிலும் குணம் அடைந்தது. மகிழ்ச்சியால் மகாசுவாமிகள் அதன் துதிக்கையைத் தடவிக் கொடுத்தார். நன்றியை வெளிப்படுத்த யானையும் கஜதாளம் போட்டது அதாவது தன் காதுகளை வேகமாக அசைத்தது. ஒருநாள் இரவு யானையின் கூடாரத்தில் தீப்பற்றியது. தென்னங்கீற்றில் எப்படியோ தீப்பற்றியிருக்கும் போலிருக்கிறது. தூங்கியதால் யாருக்கும் தெரியவில்லை. திருப்பூர் கிருஷ்ணன்