உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லறைத் திருநாள்

கல்லறைத் திருநாள்

அனைத்து ஆன்மாக்கள் தினமான நவ.2ல் கல்லறைத் திருநாள் கடைபிடிக்கப்படுகிறது. எந்த பாகுபாடும் இன்றி மறைந்தவர்களை நினைவு கூர்ந்து, மரியாதை செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதே கல்லறைத் திருநாள். இயேசு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம்  நாளில் உயிர்த்தெழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சி அளித்து பின் வானுலகை அடைந்தார். அவரைப் போலவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் உயிர்த்தெழுவதாக கருதப் படுகிறது. மண்ணிலிருந்து ஆதாமைப் படைத்த கிறிஸ்து, அவனது விலா எலும்பில் இருந்து ஏவாளைப் படைத்தார். பின் அவர்களைப் பார்த்து, ’மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் மீண்டும் மண்ணுக்கே திரும்புவீர்கள்’ என்றார். மேலும், ’நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றும் மரிக்காமல் இருப்பான்’ என்றார். இதன் அடிப்படையில் தான் கிறிஸ்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்யும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இந்நாளில் கல்லறைகளைப் பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவர். இதற்கு முந்தைய நாளான நவ.1ல் சகல பரிசுத்தவான்கள் தினம் (ஆல் செயின்ட்ஸ் டே) என்ற பெயரில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

பொன்மொழிகள்

மண்ணால் ஆன பானை மீண்டும் மண்ணாவது போல கடவுள் கொடுத்த உயிர் மீண்டும் கடவுளிடமே சேரும். வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் கடவுளும், அவரது  வார்த்தைகளும் அழியாமல் இருக்கும். உங்களை நேசிப்பவரை நேசிப்பதில் லாபம் இல்லை. வெறுப்பவரையும் நேசிப்பதில் தான் லாபம் இருக்கிறது. வேலை செய்ய விரும்பாதவர்கள், சாப்பிடவும் விரும்பாது இருக்கட்டும். மனிதனுக்காகவே ஓய்வு உண்டாக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஓய்விற்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை. அறிவாளிக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஞானம் கிடைக்கும்.  ஆனால் முட்டாளுக்கோ உலகம் முழுதும் தேடினாலும் கிடைக்காது. கற்புள்ள பெண்கள் கணவருக்கு கிரீடத்தைப் போன்றவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !