உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

* அக். 27 ஐப்பசி 10: சங்கடஹர சதுர்த்தி, சந்திரோதய கவுரி விரதம், உமா விரதம், திருநெல்வேலி காந்திமதியம்மன்
காலையில் காமதேனு, மாலையில் ரிஷப வாகனங்களில் பவனி, சிவகங்கை மாட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அபிஷேகம்.

* அக். 28  ஐப்பசி 11: முகூர்த்த நாள், வாஸ்து நாள் (பூஜை நேரம்: காலை 7:44 - 8:20 மணி), திருநெல்வேலி காந்திமதியம்மன்
இந்திர விமானத்தில் பவனி, வீரவநல்லூர் மரகதாம்பிகை பவனி. நாகை மாவட்டம் உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு,

* அக். 29 ஐப்பசி 12:  குருகுலோத்தமதாசர் திருநட்சத்திரம், சங்கரன்கோவில் கோமதியம்மன் எழுந்தருளல், திருநெல்வேலி காந்திமதியம்மன் அன்ன வாகனம், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் உடையவருடன் புறப்பாடு.

* அக். 30 ஐப்பசி 13: திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் திருக்கோலம், தென்காசி உலகம்மை பவனி, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், பத்ராசலம் ராமர் புறப்பாடு.

* அக். 31 ஐப்பசி 14: முகூர்த்தநாள், செடி, கொடி வைக்க நல்லநாள், சக்தி நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் கோலாட்ட அலங்காரம், தங்கக்கிளி வாகனம், நாகை மாவட்டம் உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.

* நவ. 1 ஐப்பசி 15: எத்திராஜ ஜுயர் திருநட்சத்திரம், திருநெல்வேலி காந்தியம்மன் சிவபூஜை செய்தல், இரவு சப்தாவர்ண பல்லக்கு, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் புறப்பாடு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* நவ. 2 ஐப்பசி 16: திருத்தணி முருகன் கிளிவாகனம், தூத்துக்குடி பாகம்பிரியாள் வீதிஉலா, திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு, ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உற்ஸவம் ஆரம்பம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சந்திரசேகரர் புறப்பாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !