உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ­விழா: நவ.8ல் துவக்கம்

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி ­விழா: நவ.8ல் துவக்கம்

திருப்­ப­ரங்­குன்­றம்: திருப்­ப­ரங்­குன்­றம் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி கோயி­லில் நவ., 8 முதல் 14 வரை கந்த சஷ்டி திரு­விழா நடக்­கிறது. நவ., 8 அனுக்ஞை பூஜையை தொடர்ந்து மூல­வர்­கள் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி, கற்­ப­க­வி­நா­ய­கர், துர்க்கை, சத்­தி­ய­கி­ரீஸ்­வ­ரர், பவ­ளக்­க­னி­வாய் பெரு­மாள், கோவர்த்­த­னாம்­பிகை அம்­பா­ளுக்கு சிறப்பு பூஜை முடிந்து, யாக­சாலை பூஜை துவங்­கும்.உற்­ஸ­வர் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி, தெய்வானை, அடுத்து ஆறு ­மு­கம் கொண்ட சண்­மு­கர், வள்ளி, தெய்­வா­னைக்கு காப்பு கட்­டப்­பட்டு திரு­விழா நம்­பி­யார் சிவாச்­சார்­யா­ருக்கு காப்பு கட்­டப்­படும். பின் விர­த­மி­ருக்­கும் பக்­தர்­க­ளுக்கு காப்பு கட்­டப்­படும். தின­மும் இரவு 7:00 மணிக்கு தந்­தத்­தொட்டி விடை­யாத்தி சப்­ப­ரத்­தில் சுவாமி எழுந்­த­ருளி கோயில் திரு­வாட்சி மண்­ட­பத்தை ஆறு­முறை வலம் வந்து அருள் பாலிப்­பார். தின­மும் காலை யாக­சாலை பூஜை­கள், காலை, மாலை­யில்  சண்­மு­கார்ச்­சனை நடக்­கும். சூர­சம்­ஹா­ரம்: நவ., 12 வேல் வாங்­கு­தல், 13 சூர­சம்­ஹா­ரம், 14 காலை­யில் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி தெய்­வானை அம்­மன் சட்­டத்­தே­ரில் எழுந்­த­ருள தேரோட்­டம் நடக்­கும். தொடர்ந்து மூல­வர் முன் தயிர்­சா­தம் படைக்­கப்­பட்டு பாவாடை நைவே­தன தரி­ச­னம் நடக்­கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !