போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2548 days ago
போடி: போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஒரே கல்லில் சிவனும், திருமாலும் இணைந்த சங்கரநாரயணன் சிலை 48 நாட்களுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் நிறைவையொட்டி சங்கர நாராயணனுக்கு மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சேகர் செய்தார்.